Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி – திரை விமர்சனம் !!

நடிகர்கள் : உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்சிகா மோத்வானி, சரண்யா மற்றும் பலர்

இயக்குனர் : எம். ராஜேஷ்

இசையமைப்பாளர் : ஹாரீஸ் ஜெயராஜ்

தயாரிப்பாளர் : உதயநிதி ஸ்டாலின்

பாடல் வரிகள் : நா. முத்துக்குமார்

படத்தின் கதை :

உதயநிதியின் ஹீரோ அறிமுகம், காமெடி மன்னன் சந்தானம்-இயக்குநர் ராஜேஸின் கலக்கல் காம்பினேசன், ”சின்ன குஷ்பூ” ஹன்சிகாவின் நான்காவது படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியிருக்கும் படம் ஓகேஓகே!

எப்போதும் பெண்கள் பின்னாடியே ஜொல்லு விட்டு சுற்றித் திரியும் இரண்டு நண்பர்களாக திரையில் அறிமுகமாகிறார்கள் ஹீரோ உதயநிதியும், காமெடி நடிகர் சந்தானமும். இப்படி சென்று கொண்டிருக்கும் போது, ஒரு சிக்னலில் ஹன்ஸிகாவை பார்க்கிறார். வழக்கம் போல, ஹன்ஸிகாவின் அழகில் மயங்கும் உதயநிதி, அவரை காதலிக்க தொடங்குகிறார். இந்த காதலுக்கு உதவி செய்கிறார் சந்தானம். முதலில் உதயின் காதலை மறுக்கும் ஹன்ஸிகா, பின்னர் நண்பர்களாகி, உதயை காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்.

ஆனால் எதிர்ப்பாராத விதமாக இவர்களிருவரும் பிரிந்து விடுகிறார்கள். ஏன் இவர்கள் பிரிந்தார்கள்..? மீண்டும் ஒன்றாக இணைந்தார்களா...? காதலில் வெற்றி அடந்தார்களா...? என்பதை திரையில் சென்று காணுங்கள்.

நிறை – குறைகள் :

உதயநிதி ஹீரோவாக அறிமுகமாகும் முதல்படம் இதுதான் என்று யாராவது சொன்னால், கண்டிப்பாக தெரியாதவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அந்த அளவிற்கு கதையைத் தேர்வு, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு பக்க பலமாக காமெடி நடிகர் சந்தானமும் இருப்பதால், காமெடி காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். ஆனால் டான்ஸ் மட்டும் தான் சுத்தமாக வரமாட்டேன் என்கிறது.

சந்தானம் பற்றி சொல்லவே வேண்டாம். அவருடைய பங்கை மிகச் சரிவர செய்திருக்கின்றார். படத்தில் இவர் வரும் இடங்கள் எல்லாம் களை கட்டுகின்றது. 10 பெண்ணுங்க லவ்வுக்கு ஓகே சொல்லுற நேரத்தில, 10ஆயிரம் பொண்ணுங்க கழற்றி விடுறாங்க எண்டு புள்ளிவிபரம் மேற்கொண்டு அவர் சொல்வது தியேட்டரில் உள்ள அனைவரையும் ரசிக்க வைக்கிறது.


ஹன்ஸிகா நடிகையாக தன் பங்களிப்பை அளித்திருக்கிறாரே தவிர, பார்ப்பதற்கு கொழு கொழுனு இருக்கிறார். கோலிவுட்டில் இவரை “சின்ன குஷ்பூ” என்று வர்ணிப்பது உண்மை தான், அதை இந்த படத்தில் ஒரு சீனில் “நீங்க சின்ன தம்பி குஷ்பூ மாதிரி இருக்கீங்க” என்று கலாய்த்திருக்கிறார்கள். இவர் அழுகிற சீன் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் இயக்குனர்.

சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் பல பரிமாணங்களை தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். ஷியாஜி ஷிண்டே, மகாநதிசங்கர், சந்தானத்தின் லவ்வர் என வரும் ஒருசில நட்சத்திரங்களும் தங்கள் பங்குக்கு சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தில் முக்கியமாக பாராட்ட வேண்டியவர் இசையமைப்பாளர் ஹாரீஸ்ஜெயராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் சுப்ரமணியெம். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான நிலையில் படத்தில் அப்பாடல்கள் இடையிடையே வந்துபோவது மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. அதிலும் படம் பிடிக்கப்பட்ட விதம் ஒரு ‘சபாஷ்’ போடலாம். நடிகர்கள் ஆர்யா, ஆண்ட்ரியா, சினேகா ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்கள்.

குடும்பத்துடன் உட்கார்ந்து வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பதால், படத்தை அனைவரும் கண்டு களிக்கலாம்.

0 comments:

Post a Comment